தின்தோஷியில் உள்ள கடையில் கலப்பட பால் விற்ற 3 பேர் பிடிபட்டனர்
தின்தோஷியில் உள்ள கடையில் கலப்பட பால் தயாரித்து விற்று வந்த 3 பேர் பிடிபட்டனர்.
மும்பை,
மும்பை கோரோகாவ் தின்தோஷி பகுதியில் கலப்பட பால் விற்கப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று மாலை 4 மணி அளவில் சிவாஜி நகரில் ஓம்கார் தெருவில் உள்ள கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் 3 பேர் கொண்ட கும்பல் பிரபல நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகளில் குறிப்பிட்ட அளவு பாலை எடுத்து விட்டு அதற்கு பதில் தண்ணீரை நிரப்பியது தெரியவந்தது.
பின்னர் மெழுகுவர்த்தி மூலம் கலப்பட பால் பாக்கெட்டை அடைத்து பொதுமக்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த ரூ.31 ஆயிரத்து 328 மதிப்புள்ள கலப்பட பால் பாக்கெட்டுகளை அதிகாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேரை அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.