விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2020-10-28 23:19 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், நகர செயலாளர் தங்க சண்முகசுந்தரம், செய்திதொடர்பாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பு ஆண்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் நான்கு ரோடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராசா பிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்