தோல்வி பயத்தால் கலவரத்தை தூண்டிவிட முயற்சி பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா மீது - சித்தராமையா குற்றச்சாட்டு
தோல்வி பயத்தால் கலவரத்தை தூண்டிவிட முயற்சி செய்வதாக பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர்(ஆர்.ஆர்.நகர்) தொகுதிக்கு உட்பட்ட யஷ்வந்த்புரா பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நான் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தேன். அப்போது பா.ஜனதாவினர் குறுக்கீடு செய்தனர். நான் பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் திரும்பும்போது என்னை மிரட்டினர். இதன் மூலம் பா.ஜனதாவின் இன்னொரு முகம் வெளிப்பட்டுள்ளது. பா.ஜனதா வேட்பாளர் முனிரத்னா, குண்டர்களை வைத்து ஆர்.ஆர்.நகரில் அரசியல் செய்கிறார். தோல்வி பயத்தால் அவர் கலவரத்தை தூண்டிவிட முயற்சி செய்கிறார்.
சிரா தொகுதியில் எங்கள் கட்சியின் வேட்பாளர் டி.பி.ஜெயச்சந்திராவை பா.ஜனதாவினர் முதியவர் என்று குறை கூறுகிறார்கள். அப்படி என்றால் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் இளைஞர்களா?. தேர்தலை சாதனை மற்றும் தத்துவம் அடிப்படையில் எதிர்கொள்ள முடியாதவர்கள் தான் இவ்வாறு ஒருவரின் புகழை கெடுப்பது, கலவரத்தை தூண்டுவது, பணம் வினியோகம் செய்வது போன்ற குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்வார்கள்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல்-மந்திரி யார் என்பதை கட்சி மேலிடம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்வார்கள். சிலர் என் மீது உள்ள அன்பால், நான் மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று பேசுகிறார்கள். அவர்களை அவ்வாறு பேச வேண்டாம் என்று கூற முடியுமா?. இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.