மேல்விஷாரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

மேல்விஷாரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-28 12:00 GMT
ஆற்காடு, 

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (வயது 20), தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் தனியார் பள்ளி அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென தினகரன் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர். உடனே தினகரன் மற்றும் அவரது நண்பர்கள் துரத்தி சென்று அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்ததில், வாலாஜா பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (24), சதீஷ் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்