திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, பா.ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-28 09:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணி தலைவி பத்மினி, மேற்கு மாவட்ட தலைவி வரலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதற்கு மாவட்ட தலைவர்கள் தர்மலிங்கம் (கிருஷ்ணகிரி கிழக்கு), நாகராஜ் (கிருஷ்ணகிரி மேற்கு), பட்டியல் அணி மாவட்ட தலைவர் மகேந்திரன் (கிழக்கு), ஆனந்த் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட பார்வையாளர்கள் ஹரிகோட்டீஸ்வரன், வேலாயுதம், மாநில மகளிர் துணைத் தலைவர் மதிவதணகிரி, பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கஸ்தூரி, பொதுச்செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திருமாவளவனை கைது செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் அன்பரசன், நந்தகுமார், மஞ்சுநாத் முருகேசன், ஸ்வேதா, ஜெயலட்சுமி, முருகம்மாள், பாரதி, செல்வி, மேனகா, மஞ்சு, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்