மராட்டியத்தில் மேலும் 5,363 பேருக்கு கொரோனா தொற்று 115 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் புதிதாக 5,363 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 115 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 363 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 16 லட்சத்து 54 ஆயிரத்து 28 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 14 லட்சத்து 78 ஆயிரத்து 496 பேர் குணமடைந்து உள்ளனர்.
தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 544 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
115 பேர் பலி
மாநிலத்தில் மேலும் 115 பேர் பலியானதை தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 463 ஆக உயர்ந்து உள்ளது.
தலைநகர் மும்பையை பொறுத்தவரையில் நேற்று ஒரே நாளில் 801 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்து 886 அதிகரித்து உள்ளது. மேலும் 23 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மும்பையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 165 ஆக உயர்ந்து உள்ளது.