சிவமொக்காவில் விமான நிலைய பணிகளை எடியூரப்பா பார்வையிட்டார் கூடுதலாக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்படும் என பேட்டி
சிவமொக்காவில் விமான நிலைய பணிகளை எடியூரப்பா நேரில் பார்வையிட்டுள்ளார். கூடுதலாக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.;
சிவமொக்கா,
முதல்-மந்திரி எடியூரப்பா சிவமொக்காவில் நேற்று புதிதாக அமைக்கப்பட்டு வரும் விமான நிலைய பணிகளை நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு அவருக்கு அதிகாரிகள் விமான நிலைய கட்டுமான பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிவமொக்காவில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இங்கு 2,050 மீட்டர் நீளத்திற்கு ஓடுதளம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பெரிய விமானங்கள் தரையிறங்க வசதியாக ஓடுதளத்தின் நீளத்தை 3,200 மீட்டர் ஆக அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக ரூ.75 கோடி நிதி அடுத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். உதான் திட்டத்தின் கீழ் இந்த சிவமொக்கா விமான நிலையத்தை கொண்டுவர மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
உரிய இழப்பீடு
இதனால் சாமானிய மக்களும் விமானத்தில் பயணிக்கக்கூடிய வாய்ப்பு பெறுவார்கள். இந்த விமான நிலையத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நிலத்தை வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இந்த விமான நிலையம் மூலம் சிவமொக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் வேகமான வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இந்த ஆய்வின்போது, ராகவேந்திரா எம்.பி., கலெக்டர் சிவக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சாந்தராஜூ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.