மராட்டியத்தில் 3½ மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது புதிதாக 5,984 பேருக்கு மட்டும் தொற்று
மராட்டியத்தில் 3½ மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்தது. புதிதாக 5 ஆயிரத்து 984 பேருக்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு தினந்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வந்தது.
பாதிப்பு குறைந்தது
20 ஆயிரத்தையும் தாண்டி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பாதிப்பு குறைந்து வந்தது. இந்தநிலையில் 3½ மாதங்களுக்கு பிறகு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிடியாக குறைந்து உள்ளது. மாநிலத்தில் கடைசியாக ஜூன் 30-ந் தேதி 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு தினந்தோறும் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியே இருந்தது.
இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 5 ஆயிரத்து 984 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் நேற்று 46 ஆயிரத்து 312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
125 பேர் பலி
இதுவரை மாநிலத்தில் 16 லட்சத்து ஆயிரத்து 365 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 13 லட்சத்து 84 ஆயிரத்து 879 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 15 ஆயிரத்து 69 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 73 ஆயிரத்து 759 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் புதிதாக 125 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 240 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 81 லட்சத்து 85 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மும்பை
தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நகரில் 2.43 லட்சம் பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.12 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 18 ஆயிரத்து 624 போ் குணமடைந்து உள்ளனர். இதேபோல நகரில் புதிதாக 45 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை நகரில் 9 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தாராவியில் மேலும் 14 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால் அங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 431 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 2 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டியத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிரடியாக வீழ்ச்சி அடைந்து இருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் பரிசோதனை எண்ணி்க்கையை குறைத்ததால் தான் நோய் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.