துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தமிழக அணி கேப்டனாக மதுரையை சேர்ந்தவர் நியமனம்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.பி.எல். அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. துபாயில் அடுத்த மாதம் நடக்கும் இந்த போட்டியில் தமிழக அணிக்கு கேப்டனாக மதுரையை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மதுரை,
உலக கிரிக்கெட் அரங்கில் புதிய அத்தியாயமாக ஐ.பி.எல். தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளூர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான டி.பி.எல்.(ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வழக்கமான ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளை போல, மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.பி.எல். அணிகளும் தோன்றிவிட்டன. அந்த வகையில் தமிழகம் சார்பில் சென்னை சூப்பர் ஸ்டார் அணி உருவாகியுள்ளது.
இந்த அணி சார்பில் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 15 வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்த அணியின் கேப்டனாக சச்சின்சிவா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் மதுரை தெற்கு தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி. இதையடுத்து அவருக்கு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சவுராஷ்டிரா பள்ளியில் நடந்த இந்த விழாவில் ஐ.பி.எல். போட்டிக்கு சச்சின்சிவா சென்று வருவதற்கான குறிப்பிட்ட தொகையை சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர் சச்சின்சிவா கூறியதாவது:-
நான் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் பங்கேற்று கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறேன். தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ளேன். இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான டி.பி.எல்.(ஐ.பி.எல்.) ஏற்படுத்தப்பட்டு, 5 அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதில் தமிழகம் சார்பில் சென்னை சூப்பர் ஸ்டார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளேன். டி.பி.எல். போட்டிகள் துபாயில் 8 நாட்கள் நடக்கின்றன. நவம்பர் மாதம் கடைசியில் போட்டிகள் தொடங்குகின்றன. டிசம்பர் 3-ந்தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் டி.பி.எல். போட்டியின் இறுதிப்போட்டி நடக்கிறது. எங்கள் அணி டெல்லியில் இருந்து துபாய் சென்று, அங்கு தங்கி விளையாடிவிட்டு மீண்டும் நாடு திரும்பும் வரை ஆகும் செலவுகளை போட்டி நடத்துபவர்கள் பார்த்துக்கொள்கின்றனர்.
ஆனால் நம் ஊரில் இருந்து டெல்லி செல்வதற்கான செலவு, கிரிக்கெட் உபகரணங்கள் வாங்குவது போன்றவற்றிற்கான பணத்தை அவரவர் தான் செலுத்த வேண்டும். இந்த தொகை இன்றி, நானும் எங்கள் அணி வீரர்களும் சிரமப்படுகிறோம். எனக்கு சரவணன் எம்.எல்.ஏ. நிதியுதவி அளித்து உள்ளார். இதேபோல மேலும் உதவிகள் கிடைத்தால் நானும், அணி வீரர்களும் கிரிக்கெட்டில் சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.