நெல்லை, தூத்துக்குடியில் 99 பேருக்கு கொரோனா தென்காசியில் தொற்று குறைந்தது

நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 99 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தென்காசியில் தொற்று குறைந்து உள்ளது.

Update: 2020-10-18 23:24 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதியில் 15 பேர், நாங்குநேரி பகுதியில் 3 பேர், அம்பை, பாப்பாக்குடி, ராதாபுரம், களக்காடு, சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் 2 பேர், மானூர், வள்ளியூர் பகுதிகளில் தலா 3 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 5 பேர் அடங்குவர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 380-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 117 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 558 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 205 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 71 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. அதே நேரத்தில் பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 491 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 816 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 549 பேர் தொடர்ந்து வீடு மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 126 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

தென்காசியில் குறைந்தது

தென்காசி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 7 ஆயிரத்து 414 பேர் வீடு திரும்பி உள்ளனர். 153 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 151 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்