2 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியது 158 பேர் உயிரிழந்தனர்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் 158 பேர் நோய் பாதிப்புக்கு உயிரிழந்தனர்.;

Update: 2020-10-14 21:28 GMT
மும்பை,

நாட்டிலேயே மராட்டியம் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 522 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அந்த வகையில் மராட்டியத்தில் புதிதாக 10 ஆயிரத்து 552 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

இதன்மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 54 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 158 பேர் நோய் பாதிப்புக்கு உயிரிழந்தனர். அவர்களையும் சேர்ந்து இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் நேற்று மட்டும் 19 ஆயிரத்து 517 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். அவர்களுடன் சேர்ந்து இதுவரை 13 லட்சத்து 16 ஆயிரத்து 769 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 1 லட்சத்து 96 ஆயிரத்து 288 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் மும்பை

மாநிலம் முழுவதும் நோய் பாதிப்பு சற்று கட்டுக்குள் வந்தபோதும் மும்பையில் தொடர்ந்து நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மும்பையில் நேற்றும் புதிதாக 2 ஆயிரத்து 211 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை இங்கு 2 லட்சத்து 34 ஆயிரத்து 602 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நேற்று 48 பேர் உயிரிழந்ததன் மூலம் நோய் பாதிப்புக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 555 ஆக உயர்ந்தது.

தாராவியில் நேற்று 13 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 385 ஆகி உள்ளது. இதில் 2 ஆயிரத்து 903 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்