கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்ததால் மாணவி விஷம் தின்று தற்கொலை
கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னமராவதி,
பொன்னமராவதி பிடாரி கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் ரோகிணி (வயது 18). இவர் 12-ம் வகுப்பு முடித்து கல்லூரி செல்வதற்காக பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது, கொரோனா கால நேரம் என்பதாலும், குடும்ப வறுமை காரணமாகவும் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த ரோகிணி கடந்த 9-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தார்.
இதைபார்த்த ரோகிணியின் தாயார் கலையரசி மகளை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் நேற்று பேராம்பூர், சூரியூர், மதயானைபட்டி, கலிமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மதயானைப்பட்டி அருகே உள்ள கோரையாற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்த அதேஊரைச் சேர்ந்த ஜோசப் செல்வராஜ் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் மாட்டுவண்டியையும் பறிமுதல் செய்தனர்.
* அரிமளம் அருகே கே.புதுப்பட்டி கீழாநிலைக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற தெக்கூர் மேலத்தெருவை சேர்ந்த சாத்தப்பன் (60) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும், ரூ.340 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
*உலக மனநல நாளை முன்னிட்டு அறந்தாங்கி அருகே குரும்பூரில் வள்ளலார் காப்பகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வக்கீல் வினோத்குமார், தன்னார்வளர் சின்னகண்னு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
*அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ள டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*அறந்தாங்கி அருகே தாந்தாணியை சேர்ந்தவர் செந்தில் (37). இவரது மனைவி சீதா (26). சம்பவத்தன்று சீதா அறந்தாங்கி வாகைமரம் பகுதியில் உள்ள அத்தை மகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.