மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற ஜல்சக்தி மந்திரியை நேரில் சந்திப்பேன் நீர்ப்பாசனத்துறை மந்திரி பேட்டி

மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற ஜல்சக்தி மந்திரியை நேரில் சந்திப்பேன் என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.

Update: 2020-10-13 22:22 GMT
பெங்களூரு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவைப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து ஆலோசித்துள்ளேன். இந்த மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற மீண்டும் ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக விரைவில் டெல்லி செல்ல இருக்கிறேன்.

அதிகாரிகள் நடவடிக்கை

நவீன மற்றும் இயற்கை விவசாயத்திற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவற்றுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். நீர்ப்பாசனத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை விரைவாகவும், குறித்த காலத்திற்குள்ளும் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்ட பணிகளை அதிகாரிகள் அடிக்கடி நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

மேலும் செய்திகள்