போதைப்பொருள் வழக்கு தலைமறைவாக இருந்த 9-வது குற்றவாளி சிக்கமகளூருவில் கைது
போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்த 9-வது குற்றவாளியான அஸ்வின் போகியை, சிக்கமகளூருவில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு,
கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்களான வீரேன் கண்ணா, லோயம் பெப்பர் சம்பா, வைபவ் ஜெயின், பிரதிக் ஷெட்டி, பிரசாந்த் ரங்கா, பினால்டு, சீனிவாஸ் சுப்பிரமணியன் உள்பட 15-க்கும் மேற்பட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா, ராகிணியின் முன்னாள் நண்பர் சிவபிரகாஷ் உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாா தீவிரம் காட்டி வருகின்றனர்.
சிக்கமகளூருவில் கைது
இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள அபிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு, முன்ஜாமீன் கேட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். ஆனால் முன்ஜாமீன் மனுவை கோர்ட்டு நிராகரித்து விட்டது. இதனால் அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் 9-வது குற்றவாளியான அஸ்வின் போகி என்பவர் சிக்கமகளூருவில் பதுங்கி இருப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிக்கமகளூருவுக்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார், அங்கு வைத்து அஸ்வின் போகியை கைது செய்தனர். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். கைதான அஸ்வின் போகி, ரவிசங்கர் மற்றும் அபிசாமி ஆகியோரின் நெருங்கிய நண்பர் என்றும், வெளிநாட்டை சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், அதன்மூலம் அவர் போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.