ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் - 350 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-13 13:30 GMT
திருப்பத்தூர், 

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்தும், இந்த பிரச்சினையில் உத்தர பிரதேச அரசை ‘டிஸ்மிஸ்’ செய்யக்கோரியும் திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் கோவிந்தன், அருணாச்சலம் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சினேகா, பேராசிரியர் பாரதிராஜா, த.மு.மு.க மாநில துணைச் செயலாளர் சனாவுல்லா உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் கலா, கோகுல், அமர்நாத், வெங்கடேசன் ஆனந்தன், பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 350 பேரை திருப்பத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்