முருகம்பாளையத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் முருகம்பாளையத் தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீரபாண்டி,
திருப்பூர் முருகம்பாளையம் மெயின் சாலையில் கடந்த மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையால் முருகம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்றும், எனவே டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார் பில் பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடை முன்பாக ஊர் பொதுமக்கள் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதனால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் நவீன் குமார் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரி வித்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அனைவரும் திருப்பூர் கலெக்டர் அலுவல கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட கலெக்டரி டம் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.