தாதரில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
தாதரில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மும்பை,
மாநகராட்சி ‘ஜி’ வடக்கு வார்டில் தாராவி, மாகிமை விட தாதரில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நேற்று அங்கு புதிதாக 25 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை அங்கு 4 ஆயிரத்து 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 390 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி
தாராவியில் நேற்று 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 336 ஆகி உள்ளது.
தற்போது தாராவியில் 162 பேர் மட்டுமே நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாகிமில் புதிதாக 40 பேருக்கு வைரஸ் நோய் கண்டறியப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 634 ஆக உயர்ந்து உள்ளது.