செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலி 600-ஐ தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலி 600-ஐ தாண்டி உள்ளது.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 23 பேர் உள்பட நேற்று 245 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 870 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 604 ஆக உயர்ந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 229 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 34 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 ஆயிரத்து 781 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 590 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்து உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 139 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 23 ஆயிரத்து 662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 22 ஆயிரத்து 484 பேர் மருத்துவமனையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 349 பேர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர்.