முத்தையாபுரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி முத்தையாபுரம் பஜாரில் இந்து முன்னணியினர் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி முத்தையாபுரம் பஜாரில் இந்து முன்னணியினர் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில வேடம் அணிந்து செல்லும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி தெற்கு மண்டல தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேச்சாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தசரா குழு ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர், மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், மண்டலச் செயலாளர் நம்பிராஜ், நிர்வாகிகள் நாராயணராஜ், வினோத், சரவணகுமார், மாரியப்பன், பால்மாணிக்கம், ஐய்யம்பாண்டி ராகவேந்திரா மற்றும் தசரா குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.