பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மின்இழுவை ரெயில்
‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்’ என்ற சொல்லாடலுக்கு ஏற்ப தமிழகத்தில் பெரும்பாலான முருகன் கோவில்கள் மலை, குன்றுகள் மீது அமைந்துள்ளன. ஆனால் அங்கெல்லாம் இல்லாத சிறப்பு முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு உண்டு.
பழனி ,
இந்தியாவிலேயே வேறு எந்த ஆன்மிக தலத்திலும் இல்லாத வகையில் சுற்றுலா வந்த நிறைவு பழனிக்கு வந்தால் கிடைக்கும் என்பதால் அதிக அளவு பக்தர்கள் பழனிக்கு வந்து செல்கின்றனர். ஏனெனில் இங்குள்ள மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவை உள்ளன. இதன் வழியே செல்ல பக்தர்கள் செல்வதை விரும்புவதோடு ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர்.
பழனிக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமானதாக உள்ளன. இதில் வயது முதிர்ந்த பக்தர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் விரைந்து செல்வதற்காக மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை அமைக்கப்பட்டன. இதில் மின்இழுவை ரெயில் சேவை, கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு பக்தர்களின் மனதை கவர்ந்து நிற்கிறது.
அடிவாரம் மேற்கு கிரிவீதியில் உள்ள மின்இழுவை ரெயில்நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் என பெயர்கொண்ட 3 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு ரெயிலில் 2 பெட்டிகள் உள்ளன. இந்த ரெயில் மூலம் அடிவாரத்தில் இருந்து 8 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்லலாம். அதிலும் ஒரு மணி நேரத்தில் சுமார் 400 பேர் வரை செல்ல முடியும். குறிப்பாக பாதுகாப்பாகவும், பழனியின் எழில் நிறைந்த இயற்கை அழகை ரசித்து செல்லும் வகையிலும் மின்இழுவை ரெயில் உள்ளதால் முதியோர்கள், பக்தர்களின் விருப்ப தேர்வாக இது அமைந்துள்ளது.
பழனிக்கு வருகை தரும் முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலனுக்காக கடந்த 1965-ம் ஆண்டில் அடிவாரத்தில் இருந்து பழனி மலைக்கோவில் செல்வதற்கு வீரவேல் என்ற பெயரில் மின்இழுவை ரெயில் சேவை முதலில் தொடங்கப்பட்டது.
தமிழகத்தின் முதல்- அமைச்சராக பக்தவச்சலம் இருந்தபோது, ஜப்பான் நாட்டு நிறுவனம் மூலம் திட்டம் வகுக்கப்பட்டு மின் இழுவை ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்ததால், 1982 மற்றும் 1988-ம் ஆண்டுகளில் கூடுதலாக 2 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்பட்டன.
பழனி என்றதும் மலைக்கோவில் மற்றும் மலைமீது செல்லும் மின்இழுவை ரெயில் ஆகியவை அனைவராலும் பிரமிப்புடனும், ஆச்சரியத்துடனும் தற்போது வரை பார்த்தும் செல்லும் ஒன்றாக உள்ளது. பழனி மலைக்கோவில் மின்இழுவை ரெயில் இயக்கத்துக்காக நாம் காணும் ரெயில்வே தண்டவாளத்தை போலவே இங்கும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் வரை தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ரெயில் சேவை கட்டுப்பாட்டுக்காக மலைக்கோவில் மேற்கு பகுதியில் பிரத்யேக அறைகள் அமைக்கப்பட்டு, ராட்சத டிரம்ப்-இரும்பு கம்பி வடம் ஆகியவை உள்ளன. இந்த கம்பிவடம் மின்இழுவை ரெயில் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டு அதன் இயக்கம் நடைபெற்று வருகிறது.
மலைக்கோவில் ரெயில்நிலையத்தில் உள்ள கம்பி வடத்தின் நீளம் 450 மீட்டர் ஆகும். வீரவேல், வெற்றிவேல் ஆகிய 2 நிலையங்களில் உள்ள கம்பி வடம் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 800 கிலோவை தாங்கி இழுக்கும் திறன் கொண்டதாகும். திருப்புகழ் நிலையத்தில் 10 ஆயிரம் கிலோ எடையை தாங்கி இழுக்கும் திறன் கொண்ட வகையில் கம்பி வடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்இழுவை ரெயில்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு 40 முறை வீதம் 120 முறை சென்று வருகின்றன. இந்த ரெயிலில் பயணம் செய்ய கட்டணமாக நபருக்கு ரூ.15 வசூலிக்கப்படுகிறது. மேலும் விரைவாக செல்ல விரும்புபவர்கள் சிறப்பு கட்டணமாக ரூ.50 செலுத்தி பயணிக்கலாம். இந்த மின்இழுவை ரெயில் சேவையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தினசரி மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
மின்இழுவை ரெயிலில் பயணம் செய்யும் பக்தர்கள், குழந்தைகள் ஆகியோரை கவரும் வகையில் மலையில் ஆங்காங்கே பூச்செடிகள், அழகு வாய்ந்த மரங்கள் கொண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்இழுவை ரெயில் பயணத்தின்போது பழனி நகரின் எழில் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை சுற்றியுள்ள வயல்வெளியை கண்டு ரசிக்க முடியும். பக்தர்களின் சேவைக்கு மட்டுமே தொடங்கப்பட்ட இந்த மின்இழுவை ரெயிலில் பயணம் செய்ய பக்தர்களிடம் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலமும் கோவில் நிர்வாகத்துக்கு வருமானம் கிடைக்கிறது.
அந்தவகையில் திருவிழா நாட்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.3 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது என்று கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது மின்இழுவை ரெயிலில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோவில் ஊழியர்கள் மட்டும், ஒரு நாளைக்கு 5 தடவை மின்இழுவை ரெயில்சேவையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.