கொள்ளிடம் பகுதி கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர், பனங்காட்டான்குடி, குன்னம், புத்தூர், பழையபாளையம், அளக்குடி, ஆச்சாள்புரம், பச்சபெருமாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் குறுவை நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று நெல்லை விற்று வந்தனர்.
ஆண்டு தோறும் செப்டம்பர் 28-ந் தேதியுடன் நெல் கொள்முதல் நிறுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதியே நெல் கொள்முதல் செய்வதை கொள்முதல் நிலையங்களில் திடீரென நிறுத்தி விட்டனர்.
10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்
இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த நெல் மூட்டைகளை அங்கேயே அடுக்கி வைத்து பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் முட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. மாதிரவேலூர் கொள்முதல் நிலையம் உள்பட அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் அடைந்து உள்ளது.
இந்த நிலையில் மூடப்பட்ட அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மீண்டும் கடந்த 5-ந் தேதி முதல் செயல்பட தொடங்கின. ஆனால் விவசாயிகள் முன்னதாகவே நெல் மூட்டைகளை எடுத்து வந்து அடுக்கி வைத்திருந்ததால், காற்றோட்ட வசதி இல்லாமல் அடுக்கி வைத்திருந்த நெல்லில் புழுக்கம் ஏற்பட்டு உள்ளது.
காய வைக்கும் பணி
மேலும் தார்பாய் கொண்டு மூடப்பட்ட நெல் மழை சாரலில் நனைந்து நெல் சேதம் அடைந்ததாக கூறி, கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து விட்டனர். இதனால் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை சாலை ஓரங்களிலும், வெற்று இடங்களிலும் கொட்டி காய வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
குறுவை சாகுபடி நெல் மூட்டைகளை விற்று கிடைக்கும் பணத்தை வைத்து சம்பா சாகுபடி செய்யலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் தற்போது நெல் சேதமடைந்ததால் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர். எனவே விவசாயிகள் நலன் கருதி சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.