அரியாங்குப்பத்தில் பயங்கரம்: ஓய்வுபெற்ற ஜிப்மர் ஊழியர் படுகொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
புதுவை அரியாங்குப்பத்தில் ஓய்வு பெற்ற ஜிப்மர் ஊழியரை கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம்,
புதுச்சேரி அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் ரோடு காக்காயன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 78). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் லேப் அட்டெண்டர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ராதா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் சுப்பிரமணி தனது வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். கீழ்தளத்தில் யாரும் வசிக்கவில்லை. நேற்று காலை வழக்கம்போல தனது அப்பாவை பார்ப்பதற்காக சுப்பிரமணியின் மகள் பச்சை வேணி வந்துள்ளார். அப்போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சுப்பிரமணி படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தனது குடும்பத்தினருக்கும், அரியாங்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
திருட்டு
இதனை தொடர்ந்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தாகோதண்டராமன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனசெல்வம், புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் கலைந்து காணப்பட்டன. மேலும் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
பின்னர் சுப்பிரமணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர். கொலை நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
விசாரணை
இந்த கொலை குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணத்திற்காக தான் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி அதனை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிக்கன்மேடு பகுதியில் திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தெய்ப்ளான் என்ற வாலிபரை ரவுடிகள் கடத்தி வந்து அடித்து கொலை செய்தனர். எனவே அரியாங்குப்பம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். காவல்துறை நடவடிக்கை எடுத்து இரவு ரோந்து பணியை தீவிரப் படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.