வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறப்பு: டிக்கெட், பார்க்கிங் கட்டணம் குறைப்பு
புதுச்சேரியில் வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. அதையொட்டி தியேட்டரில் டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக புதுச்சேரியில் தியேட்டர்கள் மூடப்பட்டன. பின்னர் மத்திய அரசு ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த 30-ந் தேதி மத்திய அரசு 5-வது கட்ட தளர்வினை அறிவித்தது.
இந்த அறிவிப்பில் இம்மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என தெரிவித்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
கட்டணம் குறைப்பு
அதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்தார். அதன்படி 15-ந் தேதி முதல் புதுவையில் உள்ள ஒரு சில தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. மற்ற தியேட்டர்கள் அடுத்த ஓரிரு தினங்களுக்கு பிறகு திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட் கட்டணமும், பார்க்கிங் கட்டணமும் குறைத்து அறிவித்துள்ளது. அதன்படி ரூ.120 டிக்கெட் ரூ.100-ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75-ஆகவும், கார் பார்க்கிங் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.30 ஆகவும், இருசக்கர வாகனம் பார்க்கிங் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆகவும் குறைத்து அறிவித்துள்ளது.