செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-11 22:45 GMT
ஊத்துக்கோட்டை, 

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் இருந்து தேவைப்படும் நேரங்களில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். 

இதற்கிடையே கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து கிருஷ்ணா நீர் வந்துகொண்டிருப்பதால் பூண்டி ஏரி நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 27.40 அடியாக உயர்ந்தது. ஆயிரத்து 212 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 21 நாட்களில் பூண்டி ஏரிக்கு 1.324 டி.எம்.சி.நீர் வந்து சேர்ந்துள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ், சென்னை குடிநீர் வாரியத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் ஊழியர்கள் நேற்றுமுன்தினம் மாலை தண்ணீர் திறந்து விட்டனர். வினாடிக்கு 140 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

மேலும் செய்திகள்