இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் ஆலோசனை கூட்டம்

இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

Update: 2020-10-11 22:30 GMT
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா தலைமை தாங்கினார். மறைமலைநகர் நகரமன்ற முன்னாள் தலைவர் கோபிகண்ணன், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பென்ஜமின், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பாசறை ஒன்றிய செயலாளர் சுதேஷ் ஆனந்த், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய தலைவர் நரசிம்ம பாபு, ஜே.கே.அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்