சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது: போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2020-10-11 19:01 GMT
பெரம்பூர், 

சென்னை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 67). இவர், அரசு துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், காய்கறி வாங்க கடைக்கு சென்ற 11 வயது சிறுமியை நைசாக பேசி தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் குமாரசாமியை அழைத்து விசாரித்தனர். அதில் அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார், குமாரசாமி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்