ஈரோட்டில் கனமழை: ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

ஈரோட்டில் கனமழை: ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2020-10-11 16:40 GMT
ஈரோடு,

ஈரோட்டில் சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பொழிய தொடங்கியது. சுமார் ஒரு மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் வெப்ப சலனம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் அதிகமாக சென்றதால், சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி வழிந்தது.

மரப்பாலத்தில் இருந்து வெண்டிபாளையம் செல்லும் ரோட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருவதால், அங்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அந்த பகுதி சேறும், சகதியுமாக மாறி இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

மொடக்குறிச்சி - 60

அம்மாபேட்டை - 41.6

பவானி - 40

குண்டேரிப்பள்ளம் - 38.2

கொடிவேரி - 38.2

பவானிசாகர் - 38.2

ஈரோடு - 38

கோபிசெட்டிபாளையம் - 27.8

பெருந்துறை - 26

தாளவாடி - 21

கவுந்தப்பாடி - 20

சென்னிமலை - 12

நம்பியூர் - 12

கொடிவேரி - 11

வரட்டுப்பள்ளம் - 11

சத்தியமங்கலம் - 10



மேலும் செய்திகள்