சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம் - சாத்தூரில் நடைபெற்றது

சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-10 22:15 GMT
சாத்தூர்,

சாத்தூர் -ஆலங்குளம் செல்லும் சாலையில் படந்தால் ரோடு மற்றும் தெருக்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் முத்துகணேஷ் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விருதுநகர் மாவட்ட தலைவர் ஜெயந்தி, நகர செயலாளா் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாத்தூரிலிருந்து அண்ணாநகர், குருலிங்கபுரம், படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

எனவே இந்த சாலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கைகளை கட்டிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்