பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்

தமிழகம்- புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Update: 2020-10-05 22:11 GMT
புதுச்சேரி,

பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் முடிவினை கைவிட வேண்டும், நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம்- புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதுவை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

உண்ணாவிரதத்துக்கு மாவட்ட செயலாளர்கள் சுப்ரமணியன், செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். உண்ணாவிரதத்தில் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் (செவ்வாய்க் கிழமை) தொடர்ந்து நடக்கிறது.

மேலும் செய்திகள்