கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு
கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் திலீபன் வரவேற்றார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், இணை செயலாளர் சரவணன் ஆகியோர் கட்சியின் சாதனைகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் வேட்டி-சேலை வழங்கி வரவேற்றார். பின்னர் அவர் கூறியதாவது.
வேதாரண்யம் இன்னும் 6 மாதத்தில் தன்னிறைவு பெற்ற நகராட்சியாக மாறும். வேதாரண்யம் தேரோடும் நான்கு வீதிகளும் கான்கிரீட் சாலைகளாக அமைய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதையடுத்து பணிகள் தொடங்க உள்ளது. நான்கு வீதிகளிலும் மின் கம்பங்கள் அகற்றப்பட்டு பூமிக்கு அடியில் கேபிள் மூலம் மின் இணைப்புகள் அமைத்து அதன் மூலம் தெரு விளக்குகள் அமைக்கப்படும். வேதாரண்யம் நகராட்சி பகுதியில் உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைய முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார். அதற்கான சுற்றுச்சூழல் சான்று மத்திய அரசிடமிருந்து விரைவில் வர உள்ளது.
வேதாரண்யம் கடற்கரை சாலையில் 4 கால் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள நவீன குப்பை கிடங்கில் நகராட்சியால் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு அரசு தார்சாலை அமைக்கும் பகுதிகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைக்கப்படும். மக்கும் குப்பைகளை தயார் செய்து இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு அரசின் சார்பில் அந்த நிலத்தை கையகப்படுத்தி மக்களுக்கு பட்டா வழங்க அரசு தயாராக உள்ளது.
அந்த நிலத்திற்கு இழப்பீடு தொகையை தமிழக அரசு கோவிலுக்கு வழங்க உள்ளது. இந்தநிலையில் தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் தற்காலிக தடை உத்தரவு பெற்றுள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கால் கால தாமதம் ஏற்படுகிறது. தடை நீக்கப்பட்டவுடன் விரைவில் கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். வேதாமிர்த ஏரி தூர்வாரப்பட்டு நான்கு கரைகளிலும் தடுப்பு சுவர் கட்டி நடைபாதை அமைத்து ஆங்காங்கே பூங்காக்கள் அமைத்து இருக்கைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.