பெண்ணுக்கு போனில் தொல்லை; தட்டிக் கேட்டதால் கடை மீது தாக்குதல்
காரைக்குடியில் பெண்ணுக்கு போனில் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டதால் கடை மீது தாக்குதல் நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி,
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 7-வது வீதி வடக்கு பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 59). இவர் பல்கலைக்கழக சாலையில் மருந்து கடை வைத்துள்ளார். இவரது கடையில் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு காரைக்குடி சுப்பிரமணியபுரம் 5-வது வீதியை சேர்ந்த பஸ் அதிபர் பாண்டித்துரை என்பவர் அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்து வந்தாராம்.
இது குறித்து அந்த பெண் தனது முதலாளி ரவிச்சந்திரனிடம் தெரிவித்துள்ளார். ரவிச்சந்திரன், மாரீஸ்வரன் என்பவர் மூலம் பாண்டித்துரையிடம் இதுபோன்று போன் செய்து தொல்லை செய்யக்கூடாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டித்துரை 6 பேருடன் மருந்து கடைக்கு சென்று தாக்கி அங்கிருந்த கண்ணாடிகள், கம்ப்யூட்டர்கள், மருந்து பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி ரவிச்சந்திரனை தாக்கி உள்ளனர். மேலும் அங்கிருந்த பெண்ணையும் தரக்குறைவாக பேசிஉள்ளனர். கடையை அடித்து உடைத்ததால் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் பாண்டித்துரை மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.