திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி நடந்த போட்டி பந்தயத்தில் வந்த குதிரை வண்டி மோதி முதியவர் கால் முறிந்தது - பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி நடந்த குதிரை வண்டி பந்தயத்தில் முதியவரில் கால் முறிந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர்கள் சிலர் குதிரை வண்டிகளில் தொடர் ஓட்ட பந்தயம் (ரேக்ளா ரேஸ்) நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் 5 குதிரை வண்டிகளில் பந்தயத்தில் கலந்து கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 25 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து குதிரைகளை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு சென்றனர்.
திருவண்ணாமலை சாலை வழியாக உடையமுத்தூர் வரை சென்றுவிட்டு திரும்பும்போது ஜம்மனபுதூர் கூட்ரோடு அருகே ஜம்மனபுதூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், (வயது 72) என்பவர் டீ குடிப்பதற்காக ரோட்டை கடந்து சென்றார். அப்போது முதியவர் மீது குதிரை வண்டி மோதியதால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, ரோடு ஓரம் விழுந்தார்.
முதியவரை இடித்த நபர் குதிரை வண்டியை அங்கேயே விட்டு வேறு ஒருவருடன் தப்பி சென்று விட்டார். உடன் வந்தவர்களும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தவர்களும் அடிபட்டவரை பார்க்காமல் அப்படியே சென்றுள்ளனர்.
இதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் முதியவர் மீது மோதிய நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி திருப்பத்தூர்- திருவண்ணாமலை சாலையில் உள்ள ஜம்மனபுதூர் கூட் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அடிபட்ட முதியவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
சாலை மறியலால் திருப்பத்தூர் -திருவண்ணாமலை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி குதிரை பந்தயத்தில் ஈடுபட்டவர்களையும் முதியவரை இடித்த நபரையும் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு கூறுகையில், அனுமதியின்றி குதிரை பந்தயம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது அனுமதியின்றி குதிரை பந்தயம் நடத்தினால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது 9442992526 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.