காயல்பட்டினம் நகரசபை தூய்மை பணி மேற்பார்வையாளர் தற்கொலை போலீசார் விசாரணை
காயல்பட்டினம் நகரசபை தூய்மை பணி மேற்பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜ். இவருடைய மகன் ஹேமந்த் பிரபு (வயது 25). இவர் காயல்பட்டினம் நகரசபையில் தூய்மை பணியாளர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். ஹேமந்த் பிரபுவுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டிற்கு வெகுநேரம் கழித்து மதுபோதையில் வந்துள்ளார். இதை அவரது தாய் சரஸ்வதி கண்டித்துள்ளார். இதனால் ஹேமந்த் பிரபு மனமுடைந்து காணப்பட்டார். பின்னர் அவரது அறையில் தூங்கச் சென்றார்.
தற்கொலை
அதிகாலையில் ஹேமந்த் பிரபு அறைக்கு சரஸ்வதி சென்றார். அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஹேமந்த் பிரபு பிணமாக இருந்தார். இதை பார்த்து சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹேமந்த் பிரபு தந்தை சண்முகராஜ் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரசபையில் வேலை செய்தார். அப்போது அவர் பணியில் இருந்தபோது இறந்ததால் வாரிசு அடிப்படையில் ஹேமந்த் பிரபுவுக்கு வேலை கிடைத்து காயல்பட்டினம் நகரசபையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.