சுரண்டையில் மினி லாரியில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
சுரண்டையில் மினி லாரியில் 2 டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுரண்டை,
தென்காசி மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சுரண்டை நகரப்பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
விசாரணையில் சுரண்டை கோட்டை தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் வீரபாகு (வயது 38) மற்றும் சிவகுருநாதபுரத்தை சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகன் அசோக் (28) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.