அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? மதுபார்களில் போலீசார் திடீர் ஆய்வு கவர்னர் உத்தரவு

அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? மதுபார்களில் போலீசார் திடீர் ஆய்வு கவர்னர் கிரண்பெடி உத்தரவு.

Update: 2020-10-04 22:29 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கூடுதல் வழிகள் மேலும் திறக்கப்படுகின்றன. கூட்ட நெரிசல் கொரோனா தொற்றை பரப்ப முக்கிய காரணமாக உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு நிர்வாகம் கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிக அளவில் செய்கிறது. அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும். தற்போது மது பார்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு அரசின் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை அறிய கலால்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அப்போது அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இது சட்ட நடவடிக்கைக்கு உதவியாக இருக்கும். விதிமுறைகளை கடைபிடிப்பதில் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தவறும் பட்சத்தில் மேலும் பல இறப்புகளுக்கும், அதிகமான சிகிச்சை தேவையையும் கொண்டு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி விடும். கொரோனா தொற்றின் 2-வது அலையை நாம் தடுக்க வேண்டும். அரசின் அனைத்து துறைகளும் இந்த தடுப்பில் பங்கு கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்