சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி - சீமான் பேட்டி
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிட தயாராக உள்ளனர் என சீமான் தெரிவித்தார்.
திரு.வி.க. நகர்,
நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை அம்பத்தூர் டி.டி.பி. காலனியில் உள்ள சதா குளக்கரையில் நேற்று பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு குளக்கரையில் பனை விதை மற்றும் அரச மர கன்றுகளை நட்டுவைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சிகள் மரம் நட முயற்சி எடுக்கவில்லை. ராமர் கோவிலுக்கு கல் எடுத்து வரச்சொன்ன பிரதமர், மரம் நடவேண்டும் என கூறவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மக்களிடம் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். எங்கள் கட்சியில் 117 பெண் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க தயாராக உள்ளனர். விரைவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி என்றால் பா.ஜ.க. மனிதர்குல எதிரி. தேர்தல் ஆணையம், நீதிமன்றம், சி.பி.ஐ. பிரதமர் மோடியின் விரல்கள் போன்றது. அவர் நீட்டச்சொன்னால் நீட்டும், மடக்கச் சொன்னால் மடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.