ஏரலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஏரல் காந்தி சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வேளாண் மசோதா சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2020-10-04 20:40 GMT
ஏரல்,

ஏரல் காந்தி சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் வேளாண் மசோதா சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கண்டன உரையாற்றினார். தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலாளர் பட்டாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சேசுராஜ், ஒன்றிய தலைவர் சுடலைமுத்து, இளைஞர் பாசறை செயலாளர் முகம்மது அப்துல் பயாஸ், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்