பெண் டாக்டருக்கு ஆபாச தொல்லை தனியார் நிறுவன மேலாளர் கைது
பெண் டாக்டருக்கு ஆபாச தொல்லை கொடுத்து வந்த தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை மலபார்ஹில் பகுதியை சேர்ந்தவர் நிகில் (வயது37) . தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருந்து வந்தார்.
இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் அடிக்கடி பெண் டாக்டரிடம் செல்போனில் பேசி வந்தார். ஒரு கட்டத்தில் நிகிலின் நடவடிக்கை பிடிக்காமல் போனதால் பெண் டாக்டர் அவரிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார்.
இதனால் நகில் அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண் டாக்டர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார் பற்றி அறிந்த நிகில் குஜராத் மாநிலம் கட்ச் பகுதிக்கு தப்பி சென்று விட்டார். கொரோனா தொற்று காரணமாக அவர் பிடிபடாமல் இருந்த நிலையில் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்ச் சென்று அவரை பிடித்து கைது செய்து மும்பை அழைத்து வந்தனர். இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.