கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல டாக்டர் கே.வி.திருவேங்கடம் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல டாக்டர் கே.வி.திருவேங்கடம் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94.;
சென்னை,
உலகில் பல்வேறு முக்கிய தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதில் சிலர் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் மருத்துவ உலகில் சிறந்து விளங்கிய, மூத்த டாக்டர் கே.வரதாசாரி திருவேங்கடமும் தற்போது கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார். மருத்துவ உலகில் கே.வி.டி. என அழைக்கப்பட்ட இவர் 31 ஆண்டுகளாக மருத்துவ பேராசிரியராக இருந்து பல்வேறு நிபுணர்களை உருவாக்கி உள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவ படிப்பை 1950-ம் ஆண்டு முடித்த கே.வி.திருவேங்கடம், பல்வேறு நாடுகளில் மருத்துவ நிபுணத்துவ படிப்புகளும் பயின்றார். பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இயக்குனராக பணியாற்றினார். ஆஸ்துமா, அலர்ஜி, நெஞ்சு பகுதி தொடர்பான நோய்களுக்கான சிகிச்சையில் சிறந்து விளங்கிய டாக்டர் கே.வி.திருவேங்கடத்துக்கு, இந்திய அரசு கடந்த 1981-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவப்படுத்தியது. மருத்துவ துறையில் தொடர்ந்து சிறப்பாக விளங்கியதற்காக பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயநகரில் வசித்து வந்த டாக்டர் கே.வி.திருவேங்கடமும், அவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவரது மனைவி கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் கே.வி.திருவேங்கடம் நேற்று மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் மறைந்த டாக்டர் கே.வி.திருவேங்கடத்துக்கு, அவர் இயக்குனராக பணியாற்றிய ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன், மருத்துவ இயக்குனர் டாக்டர் ஹரிஹரன் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மாணவர்கள் என பலர் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.