காந்திஜெயந்தியன்று பணிபுரிந்த பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது வழக்கு - தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

காந்திஜெயந்தியன்று பணிபுரிந்த பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

Update: 2020-10-03 04:41 GMT
திருவாரூர்,

சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் ஆணையின்படியும், திருச்சிராப்பள்ளி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்ரமணியன் மற்றும் திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோரின் ஆணையின்படியும் திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தலைமையிலான தொழிலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காந்திஜெயந்தியன்று திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்்களில் இயங்்கும் கடைகள், வணிக நிறுவனங்்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் என மொத்தம் 70 நிறுவனங்்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது 4 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 15 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 19 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு சார்வு செய்து பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாது பணிக்கு அமர்த்்தியது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்