காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

Update: 2020-10-03 02:42 GMT
தென்காசி,

காந்தி ஜெயந்தியையொட்டி தென்காசியில் உள்ள அவரது சிலைக்கு நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் உருவப்படத்துக்கு மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. நகர செயலாளர் சீமான் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை மேலபஜார் வாகைமர திடலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்