ராகுல்காந்தி கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 35 பேர் கைது
காஞ்சீபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் காஞ்சீபுரம் பெரு நகராட்சி முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
தடையை மீறி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டிக்கும் வகையில் நேற்று காஞ்சீபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் காஞ்சீபுரம் பெரு நகராட்சி முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் போக்குவரத்தை சரி சேய்தார். இதே போல் காந்தி சாலையில் மாவட்ட தலைவர் ஜி.வி மதியழகன் தலைமையில் சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள், புத்தன், நகர தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் கண்டன உரையாற்றினார். பின்னர் மறியலில் ஈடுபட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 35 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.