காந்தி-காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தேசபிதா மகாத்மா காந்தியின் ஜெயந்தி விழா கொண்டாட்டம் மற்றும் காமராஜர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு நேற்று காலை கவர்னர் கிரண்பெடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், அரசு தலைமை செயலாளர் அஸ்வனி குமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, மாவட்ட கலெக்டர் அருண், செயலாளர்கள் சுர்பீர் சிங், சுந்தரவடிவேலு, சரண் உள்பட ஏராளமானோர் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அங்கு மும்மத பிரார்த்தனை நடந்தது. அதன்பின்னர் தேச பக்தி பாடல்கள் பாடப்பட்டது. மேலும் ராட்டையில் நூல் நூற்கப்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்.எல்.ஏ. தலைமையில் கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், சோமசுந்தரம், தங்க விக்ரமன் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.
மாநில அ.ம.மு.க. செயலாளர் வக்கீல் வேல்முருகன் தலைமையில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர் விமலா ஸ்ரீ, துணை செயலாளர்கள் தமிழரசி, மடுகரை செல்வம், பொருளாளர் வீரப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே மகாத்மாகாந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தொகுதி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சி பிரமுகர்கள் ராஜகோபால், இளங்கோ, கலியமூர்த்தி, ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையொட்டி துப்புரவு தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு முககவசம், கை கழுவும் சோப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குணசேகர், வீரப்பன், மகாலிங்கம், கோவிந்தசாமி, சக்திவேல், லிங்குசாமி, லிங்கேஸ்வரன், தேவதாஸ், ரகு, சாந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி வாசகர் வட்ட துணைத்தலைவர் ஜெகதீசன் தலைமையில் காந்தி உருவப்படத்திற்கு வக்கீல் பரிமளம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு காந்தி வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசகர் வட்ட செயலாளர் பேராசிரியர் சம்பத்குமார் வழங்கினார்.
வாசகர் வட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், முருகையன், கோபாலகிருஷ்ணன், ராஜசேகர், மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு அவரது நினைவுநாளையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் களும், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம், மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அலுவலகம் சார்பில் நேற்று மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மலர் களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி உருவப்படத்திற்கு அமைச்சர் கமலக்கண்ணன் மலர் தூவி மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிஹாரிக்காபட், வட்டார வளர்ச்சி அதிகாரி தயாளன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மத பிரார்த்தனை இசைக்கப்பட்டு, தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டது. இறுதியில், தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
காரைக்கால் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திரு-பட்டினத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் அருள் முருகன், மாவட்ட துணைத்தலைவர் வெற்றிவேல் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் காமராஜர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி காரைக்கால்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காமராஜர் முழு உருவச்சிலைக்கு அமைச்சர் கமலக் கண்ணன், கலெக்டர் அர்ஜூன்சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிஹாரிகாபட், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.