புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 87 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

மாவட்டத்தில் புதிதாக 87 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2020-10-02 06:08 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,167 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் சிகிச்சையில் இருந்த 79 பேர் குணமடைந்ததால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில் இதுவரை 8,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 727 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 139 ஆக உள்ளது.

அரிமளம் ஒன்றியத்தில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நமணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த 35 வயது ஆண், தேக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கே.புதுப்பட்டி அருகே உள்ள களனிவாசல் கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, ஏம்பல் அருகே உள்ள எனங்கம் கிராமத்தை சேர்ந்த 32 வயது ஆண், ஏம்பல் அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தை சேர்ந்த 50 வயது பெண், 14 வயது சிறுவன் மற்றும் 51 வயது பெண் ஆகிய 7 பேர் ஆவர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அரிமளம் ஒன்றியம் வன்னியம்பட்டி ஊராட்சி வடக்குபட்டி கிராமத்தை சேர்ந்த 80 பேருக்கும், கீழாநிலைக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த 21 பேருக்கும், ராயவரம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 17 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆவுடையார் கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வங்கி மூடப்பட்டது. இதனால், வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்