கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்து பயணம் விடிய, விடிய பயணிகள் காத்திருக்கும் அவலம்
திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சமூக இடைவெளியை காற்றிலே பறக்கவிட்டு படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் ஆபத்தான பயணத்தை தொடர்கின்றனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கொரோனா பரவலால் 5 மாதங்கள் பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த மாதம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் முதலில் மாவட்டத்துக்கு உள்ளே பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களை பொறுத்தவரை கொரோனாவுக்கு முன்பு மொத்தம் 850 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஊரடங்கு கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்ட பின்னர் 70 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல், தேனியில் இருந்து மதுரை, நாகர்கோவில், திருச்சி, ஈரோடு, சேலம், சென்னை உள்பட அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் ரெயில்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன.
இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ்களை தான் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இரவு நேரங்களில் மிகவும் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மதுரை, திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வார்கள். எனவே, அந்த ஊர்களுக்கு 24 மணி நேரமும் பஸ் வசதி இருந்தது. ஆனால், தற்போது இரவு 10 மணிக்கு மேல் மிகவும் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதிலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் திண்டுக்கல், தேனி பஸ்நிலையங்களில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் விடிய, விடிய காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்து திண்டுக்கல், தேனி வழியாக வரும் பஸ்களை மட்டுமே நம்பி இருக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவு திண்டுக்கல்லில் காற்றிலே பறந்து பல நாட்கள் ஆகி விட்டது. திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது ஓடுகிற பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்கு உதாரணமாக, திண்டுக்கல்லில் இருந்து நேற்று இரவு 7 மணி அளவில் நத்தம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இதைவிட கொடுமை என்னவென்றால், பயணி ஒருவர் பஸ்சின் பின்பக்க ஏணியில் தொங்கியபடி தனது பயணத்தை தொடர்ந்தார் என்பது தான் வேதனையின் உச்சம்.
இதுபோன்ற பயணம், கொரோனாவுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதேநேரத்தில், இதுபோன்ற கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்காமல் அரசு போக்குவரத்து கழகம் அலட்சியம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.