குலசேகரன்பட்டினம் பகுதியில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா

குலசேகரன்பட்டினம் பகுதியில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2020-10-02 00:01 GMT
குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நிர்வாகத்தினர் எடுத்து வருகிறார்கள்.

குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழியில் அனல் மின் நிலைய குடியிருப்பு உள்ளது. அங்கு வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமானவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த குடியிருப்பு உள்ள 25 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு

இதையடுத்து அந்த குடியிருப்பு பகுதிகளில் வட்டார மருத்துவர் அனிபிரிமின், குலசேகரன்பட்டினம் ஊராட்சி தலைவர் சொர்ண பிரியா துரை, சுகாதார ஆய்வாளர் சுப்பையா, சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், ஊராட்சி செயலாளர் அப்துல் ரசாக் ரசூல்தீன் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது. ஒரே நாளில் குலசேகரன்பட்டினம் பகுதியில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்