தென்காசியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (ஜவாஹிருல்லா அணி) சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-10-01 23:28 GMT
தென்காசி,

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (ஜவாஹிருல்லா அணி) சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அகமதுஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, துணைத் தலைவர் அப்துல் ரகுமான், மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மைதீன் சேட் கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டை நகர செயலாளர் உமர் கத்தாப், பண்பொழி ராஜா உசேன், அச்சன்புதூர் ஜெய்னுலாப்தீன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

மேலும் செய்திகள்