செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் சுரண்டை அருகே பரபரப்பு.;

Update: 2020-10-01 23:25 GMT
சுரண்டை,

சுரண்டை அருகே கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த தர்மர் மகன் அருணாசலம் (வயது 25). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவருக்கு மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் கள்ளம்புளி கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியினர் சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் (போக்குவரத்து) பாலச்சந்தர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, செல்போன் கோபுரத்தில் ஏறி அருணாசலத்தை பாதுகாப்பாக மீட்டனர். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்