எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வீரவநல்லூர், சேரன்மாதேவி, பத்தமடை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2020-10-01 23:22 GMT
சேரன்மாதேவி,

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வீரவநல்லூர், சேரன்மாதேவி, பத்தமடை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீரவநல்லூரில் நகர தலைவர் சாகுல் அமீது தலைமையிலும், சேரன்மாதேவியில் நகர தலைவர் சிந்தா தலைமையிலும், பத்தமடையில் நகர தலைவர் அசன் காதர் தலைமையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்