என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 8 பேர் கைது போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கொலையில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
புதுச்சேரி,
புதுச்சேரி இந்திராநகர் தொகுதி காமராஜ் நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சுந்தர் என்கிற மாந்தோப்பு சுந்தர் (வயது 53). என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். காமராஜர் நகர் வார்டு முன்னாள் கவுன்சிலர். வட்டித் தொழில் செய்து வந்தார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளர்.
நேற்று முன்தினம் காலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து முனையத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாந்தோப்பு சுந்தரை வழிமறித்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பற்றி துப்பு துலங்கியது.
அதாவது, மாந்தோப்பு சுந்தருக்கும், அதே பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான மற்றொரு சுந்தர், விக்கி, அண்ணாமலை, விக்னேஷ் தரப்புக்கும் இடையே கோவிலை நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினையில் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் முடிவில் தான் மாந்தோப்பு சுந்தர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ரகசிய இடத்தில் விசாரணை
இந்த கொலை தொடர்பாக ஆரோவில் பகுதியில் பதுங்கி இருந்த சுந்தர், விக்கி, அண்ணாமலை உள்ளிட்ட 8 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில், மாந்தோப்பு சுந்தர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாயின.
என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான மாந்தோப்பு சுந்தர் காமராஜ் நகர் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவராகவும் இருந்தார். ஊரில் முக்கிய நபராக இருந்து வந்த அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலையின் தந்தை அய்யனாரை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கியுள்ளார்.
அதன்பின் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. அவ்வப்போது சுந்தர், அண்ணாமலை ஆகியோரின் குடும்பத்தினரை மாந்தோப்பு சுந்தர் ஊர்பொதுமக்கள் முன்னிலையில் இழிவுபடுத்தி பேசி வந்துள்ளார். இதனால் அண்ணாமலைக்கும், சுந்தருக்கும் மாந்தோப்பு சுந்தர் மீது விரோதம் அதிகரித்தது.
போலீசார் நடவடிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜர் நகர் அருகே உள்ள தமிழக பகுதியில் இருந்த விக்கி, விக்னேஷ், சுந்தர் ஆகிய 3 பேரையும் அங்கு வந்த மாந்தோப்பு சுந்தர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கருதிய 3 பேரும் அண்ணாமலையுடன் சேர்ந்து மாந்தோப்பு சுந்தரை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டினர்.
இதை நிறைவேற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து மாந்தோப்பு சுந்தரின் நடவடிக்கைகளை கடந்த சிலநாட்களுக்கு கண்காணித்து வந்துள்ளனர். அப்போது அவர் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செல்வதை அறிந்து அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொலை சதியை அரங்கேற்றுவது என காய் நகர்த்தினர்.
அதன்படி நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மாந்தோப்பு சுந்தரை போக்குவரத்து முனையம் அருகே வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 8 பேரையும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தபின் முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.